மூன்றாம் சுற்றுடன் முற்றுப்புள்ளி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூல் காற்பந்துக் குழு, எஃப்ஏ கிண்ணப் போட்டிகளில் மூன்றாம் சுற்றுடன் மூட்டையைக் கட்டியது. உல்வர்ஹேம்டன் வாண்டரர்ஸ் குழு 2=1 என்ற கோல் கணக்கில் லிவர்பூலை நேற்று தோற்கடித்தது. கடந்த வியாழக்கிழமை நடந்த இபிஎல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழுவிடமும் லிவர்பூல் தோற் றிருந்தது. ஆனாலும், குழுவில் ஒன்பது மாற்றங்களைச் செய்தார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். பதின்ம வயது ஆட்டக்காரர்கள் மூவருக்கு அவர் வாய்ப்பளித்தார். அத்துடன், அனுபவ ஆட்டக் காரரான டேயான் லோவ்ரன் ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தி லேயே காயமடைந்து வெளியேறி யதும் அக்குழுவிற்குப் பின்ன டைவை ஏற்படுத்தியது.

எஃப்ஏ கிண்ணத் தொடரைவிட்டு வெளியேறியதால் சோகமடைந்த லிவர்பூல் வீரர் ஷக்கிரியைத் தேற்றும் நிர்வாகி கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி