ஸ்பர்ஸ் முன்னிலை

லண்டன்: லீக் கிண்ணக் காற் பந்து அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் ஹேரி கேன் (படம்) அடித்த ஒற்றை கோலால் 1=0 என செல்சியை வீழ்த்தி, முன் னிலை பெற்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு. வெம்பிளி அரங்கில் நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத் தின் 26வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின்மூலம் அந்த கோலை அடித்தார் கேன். ஸ்பர்ஸ் குழு விற்காக இவர் போட்ட 160வது கோல் இது. இதன்மூலம் அக்குழுவிற்காக அதிக கோலடித்தவர்கள் வரிசை யில் கேன் நான்காம் இடத்திற்கு முன்னேறினார்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத் தில் ஸ்பர்சிடம் 3-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றுப் போனது. அந்த ஆட்டத்தைக் காட்டிலும் நேற்றைய ஆட்டத்தில் செல்சி வீரர்களின் செயல்பாடு மேம்பட்டிருந்தது. அக்குழுவினர் வலையை நோக்கி உதைத்த பந்து இருமுறை கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. இரண்டாம் பாதி முழுவதும் செல்சியின் கை ஓங்கியிருந்தது. ஆனாலும் அக் குழுவிற்கு அதிர்ஷ்டம் கைகொ டுக்கவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இறுதியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 - 1 என சமனில் உள்ளது.

16 Jan 2019

6 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி
செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ் PHOTO: REUTERS

16 Jan 2019

வில்லியம்ஸ் சகோதரிகள் முன்னேற்றம்