விருதைத் தக்கவைத்துக்கொண்ட சாலா

தொடர்ந்து 2வது ஆண்டாக சிறந்த ஆப்பிரிக்கக் காற்பந்து வீரர் விருதைக் கைப்பற்றினார் எகிப்து நாட்டவரும் லிவர்பூல் குழுவிற்காக விளையாடி வருபவருமான முகம்மது சாலா (இடது). சக லிவர்பூல் வீரரும் செனகல் நாட்டவருமான சாடியோ மானே (வலது) இரண்டாமிடத்தைப் பிடித்தார். ஆர்சனல், கபோன் ஆட்டக்காரர் பியர் எமெரிக் ஒபமெயாங்கிற்கு மூன்றாமிடமே கிட்டியது. சென்ற பருவத்தில் லிவர்பூல் குழுவிற்காக மொத்தம் 44 கோல்களைப் போட்டார் சாலா. நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அவர் இதுவரை 13 கோல்களை அடித்துள்ளார். சிறந்த வீராங்கனைக்கான விருதையும் சிறந்த கோலுக்கான விருதையும் தட்டிச் சென்றார் தென்னாப்பிரிக்காவின் ககட்லானா. (படத்தில்) பிரபல ஆப்பிரிக்கப் பாடகர் யூசோ இண்டோருடன் மகிழ்ச்சியாக ஆடிப் பாடும் சாலா, மானே. படம்: இபிஏ

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி