வெற்றிகளைப் பதிவு செய்த கத்தார், உஸ்பெகிஸ்தான்

துபாய்: ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டி ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நடைபெற்று வரு கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கத்தாரும் லெபனானும் மோதின. இதில் கத்தார் 2=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. முற்பாதி ஆட்டத்தில் கார்னர் வாய்ப்பு மூலம் லெபனான் பந்தை வலைக்குள் அனுப்பியது. கோல் போட்டுவிட்டோம் என்ற மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் மூழ்கிய லெபனான் வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தப்பாட்டம் காரணமாக அந்த கோலை நடுவர் ஏற்க மறுத்து விட்டார். அதனைத் தொடர்ந்து, கத்தார் அபாரமான முறையில் இரண்டு கோல்களைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது. மற்றோர் ஆட்டத்தில் உஸ்பெ கிஸ்தானும் ஒமானும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தை 2-1 எனும் கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் கைப்பற்றியது. மற்றோர் ஆட்டத்தில் துர்க் மெனிஸ்தானை 3-2 எனும் கோல் கணக்கில் ஜப்பான் போராடித் தோற்கடித்து போட்டியை வெற்றி யுடன் தொடங்கி உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்