பர்ட்டனை நிலைகுலைய வைத்த சிட்டி

மான்செஸ்டர்: லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியை நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் யுனைடெட் நெருங்கி உள்ளது. அரையிறுதிக்கான முதல் ஆட்டத்தில் பர்ட்டன் அல்பியனுடன் சிட்டி மோதியது. நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிட்டி மொத்தம் ஒன்பது கோல்கள் போட்டு பர்ட்டனைத் திணறடித்தது. சிட்டியின் நட்சத்திர வீரர்களான கெவின் டி பிராய்ன, ஒலெக்சாண்டர் சின்சென்கோ, ஃபில் ஃபோடன், கைல் வாக்கர், ரியாட் மாரேஸ், கேப்ரியல் ஜேசுஸ் ஆகியோர் கோல் போட்டனர். சிட்டியின் சொந்த விளை யாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேப்ரியல் ஜேசுஸ் நான்கு கோல்கள் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

அரையிறுதிக்கான இரண் டாவது ஆட்டம் இம்மாதம் 23ஆம் தேதியன்று இரண்டாம் நிலை லீக்கில் விளையாடும் பர்ட்டனின் பிரேல்லி விளையாட்டரங்கத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால் முதல் ஆட்டத்திலேயே 9=0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்துள்ள பர்ட் டன், அடுத்த ஆட்டத்தில் கடமைக் காக மட்டுமே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தி லேயே ஆதிக்கம் செலுத்திய சிட்டி ஐந்தாவது நிமிடத்திலேயே கோல் போட தொடங்கியது. சில நிமிடங்கள் கழித்து ஆட்டத்தைச் சமன் செய்ய பர்ட்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அக்குழுவின் மார்கஸ் ஹார்னஸ் அதை நழுவவிட்டார். அதனைத் தொடர்ந்து, சிட்டி கோல் மழை பொழிய, இடைவேளை யின்போது சிட்டி 4=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்திலும் சிட்டி யின் கோல் பசி அடங்கவில்லை.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்