உலகக் கிண்ணத்திற்கு ஆயத்தம் சிட்னி: உலகக் கிண்ண கிரிக்கெட்

போட்டிகளுக்கு இன்னும் ஐந்து மாதங்கள்கூட இல்லாத நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்களே இந்திய அணிக்கான இறுதி ஆயத்தக் களமாக விளங்குகின்றன. ஆஸ்திரேலிய அணிக்கெதி ரான டெஸ்ட் தொடரை முதல் முறையாகக் கைப்பற்றிய உற்சாகத் தில் இருக்கும் இந்திய அணி, இன்று தொடங்கவுள்ள ஒருநாள் போட்டித் தொடரிலும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப் பில் களமிறங்குகிறது. முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ‌ஷிகர் தவான், நடு வரிசையில் நிலைத்து ஆடக்கூடிய அம்பதி ராயுடு, அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் போன்றோர் இருப்பது இந்திய அணிக்குப் பலம். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இளம் வேகப்பந்து வீச் சாளர் கலீல் அகமது, மீண்டும் ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்றுள்ள முகம்மது ஷமி ஆகி யோரின் தோள்களில் சுமை கூடி உள்ளது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி