வாய்ப்புகளை வீணடித்த இந்தியா

அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை வெற்றி யுடன் தொடங்கிய இந்திய அணி, அந்த வெற்றிப் பயணத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது இரண்டாவது ஆட்டத்தில் சறுக்கியது. போட்டிகளை ஏற்று நடத்தும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிடம் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி நேற்று தோற்றுப் போனது. இருந்தாலும் முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மூன்று புள்ளி களுடன் ‘ஏ’ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கல்ஃபான் முபாரக் அல் ஷம்சி 41வது நிமிடத்திலும் அலி அகமது மப்கூட் 88வது நிமிடத்திலும் கோலடித்து, தங்களது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி