லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ் பர் குழுவின் ஹேரி கேன் போல மான்செஸ்டர் யுனைடெட் குழு வின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்டும் முன்னணித் தாக்குதல் ஆட்டக் காரராக உருவெடுக்க முடியும் எனக் கூறியுள்ளார் அக்குழுவின் இடைக்கால நிர்வாகி ஒலே குனார் சோல்சியார். வெம்பிளி விளையாட்டரங்கில் இன்றிரவு 12.30 மணிக்கு நடை பெறவுள்ள இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் அவ்விரண்டு பிரிட்டிஷ் வீரர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடவுள்ளனர். இந்த ஆட்டத்தில் வென்று, சோல்சியாரின் வெற்றிப் பயணத் தைத் தடுத்து நிறுத்தும் முனைப் புடன் உள்ளது ஸ்பர்ஸ் குழு. ஏனெனில், சோல்சியார் வந்த பிறகு யுனைடெட் குழு தனது ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் ஆடிய ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ரேஷ்ஃபர்ட் உடன் பணியாற்றுவது உற்சாக மான அனுபவம் என்றும் அவரால் வலிமையான ஆட்டக்காரராகத் திகழ முடியும் என்றும் சோல் சியார் கணித்துள்ளார்.
'கேனுக்கு நிகரான ரேஷ்ஃபர்ட்'
1 mins read

