ஒலிம்பிக் வீரரை வென்ற லோ

ஒலிம்பிக் வீரரை வென்ற லோ

1 mins read
36f41081-60e0-4d33-b702-a515c005b03e
-

பேங்காக்: தாய்லாந்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் வீரரான 21 வயது லோ கியான் யிவ், உலகின் முன்னணி வீரரான சீனாவைச் சேர்ந்த லின் டானை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்துள்ளார். இரண்டு முறை ஒலிம்பிக் வெற்றியாளரான லின் டானை 21- 19, 21-18 எனும் புள்ளிக் கணக் கில் அவர் வீழ்த்தினார். இதன் மூலம் பூப்பந்து விளை யாட்டுப் போட்டியில் அனைத் துலகப் பதக்கத்தை அவர் முதல் முறையாக வென்றுள்ளார். பின்னர் பேட்டியளித்த லோ, "லின்னுடன் விளையாடியதை கௌரவமாகக் கருதுகிறேன். இதில் நான் வெற்றி பெற்றது அதைவிட மகிழ்ச்சியளிக்கிறது," என்றார். அவரை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. என்னுடைய இளமை எனக்குக் கைகொடுத்தது என்றும் அவர் சொன்னார். பெற்றோருக்கும் தமது பயிற்று விப்பாளருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

உலகின் முன்னணி வீரரை வீழ்த்திய சிங்கப்பூரின் லோ கியான் யிவ். படம்: யுடியூப் காணொளி