400 கோலடித்து மெஸ்ஸி சாதனை

400 கோலடித்து மெஸ்ஸி சாதனை

1 mins read

பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து லீக்கில் (லா லீகா) நானூறு கோல்களை அடித்த முதல் ஆட்டக்காரர் எனும் வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருக்கிறார் பார்சிலோனா குழுவின் நட்சத்திர வீரரான லயனல் மெஸ்ஸி. எய்பார் குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, பட்டியலில் தனது முதல் நிலையை வலுவாக்கிக் கொண்டது. பார்சிலோனா சார்பில் மெஸ்ஸி பங்கேற்ற 435வது லீக் ஆட்டம் இது. ஆட்டத்தின் 19வது, 59வது நிமிடங்களில் லூவிஸ் சுவாரெசும் 53வது நிமிடத்தில் மெஸ்ஸியும் கோலடித்தனர். நடப்பு லா லீகாவில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடி 17 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, அதிக கோலடித்தவர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.