அடிலெய்டு: வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப் பட்டபோதும் ஆஸ்திரேலிய அணிக் கெதிரான முதல் ஒருநாள் கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி தோற்று அதிர்ச்சியளித்தது. இதனால், எஞ்சியிருக்கும் இரு போட்டிகளிலும் வென்றால் தான் இந்திய அணியால் தொட ரைக் கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரண்டா வது போட்டி இன்று நடக்கிறது. ஹார்திக் பாண்டியாவிற்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டு உள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் ஆடும் பதினொருவரில் இடம்பெற லாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் முதல் போட்டி யில் சொதப்பிய இன்னொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் இடம் பறிபோகலாம். ஜடேஜா விற்குப் பதில் கேதார் ஜாதவ் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் நேரப்படி காலை மணி 11.20க்கு ஆட்டம் தொடங்க இருக்கிறது.

