திடலில் மயங்கி விழுந்து கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

திடலில் மயங்கி விழுந்து கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

1 mins read

பனாஜி: இந்தியாவின் கோவா அணிக்காக ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அனு பவம் கொண்ட ராஜேஷ் கோட்கே, 46, திடலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடியபோது 30 ஓட்டங் களைச் சேர்த்திருந்த நிலையில் ஆடுகளத்தில் ராஜேஷ் திடீரென மயங்கிச் சாய்ந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயி னும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மர்கோவா கிரிக்கெட் மன்றத்தின் செயலா ளர் அபூர்வ் பெம்பிரே கூறினார்.