ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக் காவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக் கெட் அணி, அந்த அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டி களிலும் தோல்வியடைந்தது. கடந்த 11ஆம் தேதி தொடங் கிய மூன்றாவது டெஸ்ட் போட்டி யின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 262 ஓட்டங் களையும் பாகிஸ்தான் 185 ஓட்டங்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் குவின்டன் டி காக் அதிரடியாக ஆடி 129 ஓட்டங்களை விளாச, தென்னாப்பிரிக்க அணியால் 303 ஓட்டங்களை எடுக்க முடிந் தது. இதையடுத்து, 381 ஓட்டங் களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன் னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியால் 273 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இத னால் 107 ஓட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
டெஸ்ட் தொடரை முற்றிலுமாக இழந்த பாகிஸ்தான் அணி
1 mins read

