மெல்பர்ன்: இவ்வாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியப் பொது விருது போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் தகுதி பெற்றனர். 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்திற்குக் குறிவைத்துள்ள செரீனா முதல் சுற்றில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டட்யானா மரியாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. அவரின் மூத்த சகோதரி வீனஸ் 6-7, 7-6, 6-2 என்ற செட்களில் ருமேனியாவின் மிகேலா புஸர்னெஸ்குவைத் தோற்கடித்தார். அதே வேளையில், இரு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றிருக்கும் பெலருஸ் நாட்டின் விக்டோரியா அஸரென்கா முதல் சுற்றில் தோற்று வெளியேறினார்.
வில்லியம்ஸ் சகோதரிகள் முன்னேற்றம்
1 mins read
செரீனா வில்லியம்ஸ் PHOTO: REUTERS -

