இறுதிக்கட்ட கோலால் ஆஸ்திரேலியா வெற்றி

இறுதிக்கட்ட கோலால் ஆஸ்திரேலியா வெற்றி

1 mins read
d5aab46b-b53d-487c-997f-986cfe0a039d
சிரியாவின் இரண்டாவது கோலைப் போடும் கிரிஸ் இகோனோமிடிஸ் (இடது). படம்: இபிஏ -

அல்அயின்: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்திய சுற்றுக்கு ஆஸ்தி ரேலியா தகுதி பெற்றுள்ளது. 'பி' பிரிவில் ஜோர்தான் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தைப் பிடிக்க ஆஸ்திரேலியாவுக்கும் சிரியாவுக்கும் இடையே நேற்று கடுமையான போராட்டம் நிலவி யது. இதில் ஆஸ்திரேலியா ஆட்டம் முடிய வினாடிகளே எஞ்சியிருந்தபோது வெற்றி கோலைப் போட்டது. ஆட்டம் 3=2 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக முடிந்தது. ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ அரை மணி நேரத்தில் சிரியாவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. பந்து வலையைத் தீண்ட, சிரியா வீரர்கள் கொண்டாடத் தொடங் கினர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர் கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறி கோலை ஏற்க மறுத்தார் நடுவர். இடைவேளைக்குக் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் இருந்தபோது ஆஸ்திரேலியா அதன் முதல் கோலைப் போட்டது.