புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி (படம்) சாதனை வீரராகத் திகழ்கிறார். அதிலும் ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி கோஹ்லி சாதனை புரிந்து வருகிறார். தற்போது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதே நாளில் கோஹ்லி சதம் அடித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கோஹ்லி சதம் (122) அடித்தார். கடந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தென்னாப் பிரிக்காவுக்கு எதிராக கோஹ்லி (153) சதம் அடித்தார். இவ்வாண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆஸ்திரேலியா வுக்கு எதிராக கோஹ்லி 104 ஓட்டங்கள் அடித்துள்ளார். இது இவ்வாண்டில் கோஹ்லி அடித்த முதல் சதமும் ஆஸ்திரேலிய மண் ணில் அடிக்கும் ஒன்பதாவது சதமும் ஆகும். இதன்மூலம் இங்கிலாந்து வீரர் சர் ஜேக் ஹாப்சின் சாதனையான 9 சதங்களைச் சமன் செய்துள்ளார் கோஹ்லி.
ஆண்டுதோறும் ஜனவரி 15ல் சதமடித்து கோஹ்லி சாதனை
1 mins read
-

