லண்டன்: ஸ்பர்ஸ் குழுவின் நட்சத்திர வீரர் ஹேரி கேனுக்குக் கணுக்காலில் காயம் ஏற் பட்டுள்ளது. இதன் விளைவாக வரும் மார்ச் மாதம் வரை அவரால் காற்பந்து ஆட்டங்களில் களமிறங்க முடியாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மான் செஸ்டர் யுனைடெட்டுக்கு எதி ரான ஆட்டத்தில் கேன் காயமடைந் தார். அந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ் 1-=0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. கேனுக்குத் தொடர்ந்து மூன்று பருவங்களில் காயமுற்று ஆட்டங் களில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. "கேனை எங்களது மருத்துவப் பிரிவினர் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மார்ச் மாதம் தொடக்கத்தில் அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கிறோம்," என்று ஸ்பர்ஸ் குழு அறிக்கை வெளி யிட்டுள்ளது. இதற்கிடையே, ஆர்சனலின் கோல்காப்பாளர் பீட்டர் செக் இந்தப் பருவத்துக்குப் பிறகு காற்பந்திலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
ஸ்பர்சின் கேன் காயம்; மார்ச் வரை ஓய்வு
1 mins read

