இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவுக்கு விளையாடும் சோன் ஹியுங் மின் உந்துதல் கொடுக்க ஆசிய கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்ட மொன்றில் நேற்று முன்தினம் சீனாவை 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியா பந் தாடியது. இதன்மூலம் அது விளையாடிய பிரிவில் தென்கொரியா முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆட்டம் தொடங்கிய 12ஆம் நிமிடத்தில் தப்பாட்டம் மூலம் சோனை கீழே தள்ளிய சீன வீரருக்கு எதிராக தென்கொரியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு பெனால்டியை எடுத்த ஹுவாங் உய் ஜோ பந்தை குறிதவறாமல் உதைத்து கோலாக் கினார். பின்னர் இரண்டாம் பாதி தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் சோன் கொடுத்த பந்தை கிம் மின் ஜே வலைக்குள் புகுத்தி தென்கொரியாவின் இரண்டாவது கோலை போட்டார். டிசம்பர் மாதம் தொடங்கி ஸ்பர்ஸ் குழுவுக்காக மொத்தம் 13 ஆட்டங்களில் விளையாடிய சோன், "நான் சோர்வாக இருப்பது உண்மைதான், இவ்வளவு நேரம் இந்த ஆட்டத்தில் விளையாட வேண்டியிருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

