இந்திய காற்பந்து அணியின் பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய காற்பந்து அணியின் பயிற்சியாளர் பதவி விலகல்

1 mins read
70f75bdd-f487-48bc-9a76-fbe3f25dc9a8
-

ஷார்ஜா: பதினேழாவது ஆசிய கிண்ணக் காற்பந் துப் போட்டி ஐக்கிய அரபு சிற்றரசில் நடந்து வரு கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஹ்ரேனை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந் திய அணி 0=1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. கடைசி நிமிடத் தில் கிடைத்த பெனால்டி வாய்ப் பைப் பயன்படுத்தி பஹ்ரேன் அணி கோல் போட்டது. முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4=1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வென்றது. அடுத்த ஆட்டத்தில் 0=2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு சிற்றரசி டம் தோல்வி அடைந் தது. மூன்று புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததும் இந்திய அணியின் பயிற்றுவிப்பாள ரான 56 வயது ஸ்டீ பன் கான்ஸ் டன்டைன் (இங்கி லாந்து) தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.