சிட்னி: ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் அடிலெய்டில் நடைபெற்ற இரண்டா வது போட்டியில் இந்தியாவும் வென்றன. இந்நிலையில் இந்தத் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல் பர்னில் நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபடும். ஆஸ்திரேலிய அணியில் சுழற் பந்து வீச்சாளரான நேதன் லயன் இடம்பிடித்திருந்தார். அவர் இரண்டு போட்டிகளிலும் 109 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆடம் ஜம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேதன் லயன் அதிரடி நீக்கம்
1 mins read
-

