வெற்றி பெறும் கட்டாயத்தில் ஆர்சனல்

வெற்றி பெறும் கட்டாயத்தில் ஆர்சனல்

1 mins read

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டி­களில் வெற்றி பெற்று அதன்மூலம் கிடைக்கக்கூடிய பணம் ஒருபுறம், சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளில் விளை­யாடும் பெருமை மறுபுறம் என நாளை செல்சியுடன் மோதும் ஆர்சனல் அந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய காரணங்­கள் பல உண்டு. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் கடந்த ஆறு ஆட்டங்களில் மூன்­றில் ஆர்சனல் தோல்வியடைந் துள்­ளது. இதனால், பிரிமியர் லீக்கில் தற்போது ஆர்சனல் ஐந்­தாம் நிலையில் உள்ளது. அத்து­டன், சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும் நான்காம் நிலையிலுள்ள செல்சியுடனான புள்ளிகள் வித்தி யாசம் ஆறாக உள்ளது. இந்த நிலையில், புது வீரர்களை கொண்டு வருவதில் செல்சியிடம் இருக்கும் முனைப்பு ஆர்சனலிடம் இல்லை என்றே தோன்றுகிறது. இத்தாலியின் யுவென்டஸ் அணியில் தமது வீரராக விளை யாடி 2015=2016ஆம் ஆண்டு காற்பந்துப் பருவத்தில் 38 கோல்கள் போட்ட கொன்சாலோ ஹிக்குவேய்ன் என்ற தாக்குதல் ஆட்டக்காரரை செல்சி நிர்வாகி மொரி­சியோ சாரி ஒருவழியாக செல்­சிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்துவிட்டார். ஆர்சனலின் பிரச்சினை தாக்குதல் ஆட்டக்காரர் இல்லாதது இல்லை. பிரிமியர் லீக்கில் இது வரை விளையாடிய 22 ஆட்டங் களில் 32 கோல்கள் எதிரணி யினரை போடவிட்ட ஆர்சனலுக்கு திறமையான தற்காப்பு வீரர்கள் இல்லாததே பிரச்சினை.