விளையாட்டு ஆணைய இயக்குநர் கைது

விளையாட்டு ஆணைய இயக்குநர் கைது

1 mins read

புதுடெல்லி: இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவை­யில் உள்ள 19 லட்ச ரூபாய் கட்டணத் தொகையைச் செலுத்த ஆணையத்தின் இயக்குநர், லஞ்சமாக 3 விழுக்காடு தொகை கேட்டதாக சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்கு­நர் எஸ்.கே. சர்மா, இளநிலை கணக்கு அதிகாரி ஹரிந்தர் பிரசாத், சூப்பர் வைசர் லலித் ஜாலி, மற்றோர் அதிகாரி­யான வி.கே.சர்மா மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் மன்தீப் அகுஜா, அவரது அலுவலக ஊழியர் யூனுஸ் ஆகிய 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.