மெல்பர்ன்: ஆஸ்திரேலியா = இந்தியா இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மெல்பர்னில் நடை பெற்றது. இதில் மகேந்திர சிங் டோனியின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது. ஒருநாள் தொடரை 2=1 என ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாகக் கைப்பற்றியது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1=1 என சமநிலையில் இருந்தது. பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ், கலீல் அகமது ஆகியோருக்குப் பதிலாக கேதர் ஜாதவ், தமிழகத்தின் விஜய் ஷங்கர், சாஹல் ஆகியோர் சேர்க்கப் பட்டனர். சாஹல் வீசிய தனது முதல் ஓவரில் ஷான் மார்ஷ் (39), கவாஜா (34) ஆகியோரும் தொடர்ந்து ஸ்டாய்னிசும் (10) ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரில் 230 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் (9), தவான் (23) அதிர்ச்சி தந்தனர். கோஹ்லி 46 ஓட்டங்கள் எடுத்தார். அடுத் தடுத்து ஆட்டமிழக்கும் வாய்ப்பில் இருந்து தப்பிய டோனி ஒருநாள் அரங்கில் 70வது அரை சதத்தை எட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் அடித்த 8வது அரைசதம் இது. ஸ்டாய்னிஸ் பந்தில் பவுண்டரி அடித்த கேதர் ஜாதவ், தனது 4வது அரைசதம் எட்டினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களுக்கும் மேல் சேர்க்க இந்திய அணி வெற்றியை நெருங்கியது. கடைசியில் கேதர் ஜாதவ் ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க இந்திய அணி 49.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணம் வென்றது இந்தியா
2 mins read

