காதலி பற்றி அறிவித்தார் ரிஷப் பந்த்

காதலி பற்றி அறிவித்தார் ரிஷப் பந்த்

1 mins read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பந்த் தனது சமூக ஊடகத் தளத்தில் இளம் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இஷா என்ற அந்தப் பெண் ரிஷப் பந்த்தின் காதலி எனத் தெரியவந்துள்­ளது. ரிஷப் பந்த் தனது பதிவில் "நான் உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகி­றேன். ஏனெனில் எனது மகிழ்ச்சிக்கு நீ தான் காரணம்," எனக் குறிப்பிட்டுள்­ளார். அதேபோல் அந்தப் பெண்ணும் அதே படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "என்னுடையவர், என் ஆன்மா, எனது உற்ற தோழன், எனது வாழ்வின் அன்புக்குரியவர்," என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.