டாக்கா: பங்ளாதேஷ் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சியால்ஹெட் சிக்சர்ஸ் = ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. சியால்ஹெட் சிக்சர்ஸ் அணித் தலைவர் வார்னர் பந்தடிக்கும்போது 19வது ஓவரை கிறிஸ் கெய்ல் வீசினார். முதல் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த வார்னர், அடுத்த 2 பந்துகளிலும் ஓட்டங்கள் ஏதும் எடுக்கவில்லை. இதனால் வலது கையில் பந்தடிக்கத் தொடங்கினார். முதல் பந்தை சிக்சருக்குத் தூக்கிய வார்னர், அடுத்த இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இடது கை பந்தடிப்பாளரான டேவிட் வார்னர், வலது கையால் பந்தடித்தது கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைக்கு உட்பட்டதுதானா எனும் கேள்வியை எழுப்பியது. அதனால் கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மெல்பர்ன் கிரிக்கெட் சங்கம் வார்னரின் பந்தடிப்புப் பதிவை ஆய்வுசெய்தது. அப்போது அவர் விதிமுறைப்படிதான் பந்தடித்தார் என்று தெரிவித்துள்ளது.
வார்னர் விதிமீறவில்லை: எம்சிசி
1 mins read

