இரு சகாப்தங்களின் சந்திப்பு

இரு சகாப்தங்களின் சந்திப்பு

1 mins read
219a89b9-1962-44ef-8a44-c2379e2bffb0
-

டென்னிஸ் விளையாட்டில் ஆக அதிகமாக 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனைக்குச் சொந்தக்காரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (நடுவில்). கிரிக்கெட் விளையாட்டில் முந்தைய சாதனைகளை எல்லாம் ஒவ்வொன்றாக முறியடித்து வெற்றி நடை போட்டு வருபவர் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி (இடது). இவ்விருவரும் நேரில் சந்தித்துக்கொண்ட அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நேற்று இடம்பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடர்களை வென்று சாதித்த கையோடு ஃபெடரரையும் சந்தித்து இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைத் தம் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக ஆக்கிக்கொண்டார் கோஹ்லி. இரு வேறு சகாப்தங்களின் இந்தச் சந்திப்பின்போது கோஹ்லியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா உடனிருந்தார். இந்தச் சந்திப்பு பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள கோஹ்லி, "ஆஸ்திரேலிய ஓப்பனில் என்ன ஒரு நாள்! ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இதைவிட அற்புதமாக முடிக்க முடியாது," எனக் கூறியுள்ளார். படம்: இபிஏ