பரிசுப்பணம்: ஆஸ்திரேலியாவை கடுமையாகச் சாடும் கவாஸ்கர்

பரிசுப்பணம்: ஆஸ்திரேலியாவை கடுமையாகச் சாடும் கவாஸ்கர்

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக இருதரப்பு ஒரு நாள் போட்டித் தொடரைக் கைப் பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்குப் பரிசுத்தொகை வழங் கப்படாததால் அந்த அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலிய கிரிக் கெட் வாரியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மூன்றாவது போட்டியின் நாயகன் சகலுக்கும் தொடர் நாயகன் டோனிக்கும் ஆளுக்கு 500 ஆஸ்திரேலிய டாலர் பரிசாக வழங்கப்பட்டது. அதையும் அவர் கள் ஓர் அறக்கட்டளைக்கு நன் கொடையாக அளித்துவிட்டனர். இதையடுத்து, "தொடரை வென்ற அணிக்கு வெறும் கிண் ணம் மட்டும்தானா? ஒளிபரப்பு உரிமைகள் மூலம் போட்டி ஏற்பாட் டாளர்கள் பெரும் தொகையை ஈட்டுகின்றனர். அவர்கள் ஏன் வீரர்களுக்கு மதிக்கத்தக்க பரிசுத்தொகையை வழங்கக் கூடாது? ஆதரவாளர்கள் மூலம் விளையாட்டிற்குப் பெரும் தொகை கிடைக்க முழுக் காரணமும் ஆட்டக்காரர்கள்தான் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது," என்று கவாஸ்கர் விளாசினார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வழங்கப்படும் பரிசுப் பணத்தையும் அவர் சுட்டிக்காட்டி னார். விம்பிள்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறுவோ ருக்கு ரூ.36 லட்சமும் (S$68,600) பட்டம் வெல்வோருக்கு ரூ.21 கோடியும் (S$4 மில்லியன்) பரிசாக வழங்கப்படுகிறது.