கோலாலம்பூர்: மலேசிய மாஸ் டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பறிகொடுத்தார். அரையிறுதியில் அவர் மூன்று முறை உலக வெற்றியாளரான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்த்தாடினார். இந்த ஆட்டத் தில் 21-16, 21-13 என்ற நேர் செட்களில் மரின், சாய்னாவைத் தோற்கடித்தார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வரான மரின் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னாவைவிட நான்கு புள்ளிகள் பின்தங்கி இருந்தார்.
ஆனாலும், மீண்டு எழுந்து செட்டைத் தனதாக்கிய அவர், இரண்டாம் செட்டிலும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வாகை சூடினார். மரினும் சாய்னாவும் இதுவரை பத்து முறை மோதியுள்ளனர். அதில் சாய்னா ஐந்து முறையும் மரின் ஐந்து முறையும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

