'டோனி ஒரு சூப்பர் ஸ்டார்'

'டோனி ஒரு சூப்பர் ஸ்டார்'

2 mins read

மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் விக்கெட் காப்பாளருமான மகேந்திர சிங் டோனியை (படம்) ஒரு சூப்பர் ஸ்டார் என்றும் கிரிக்கெட் வரலாற்றில் அவருக்கு நிரந்தர இடம் உண்டு என்றும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் புகழ்மாலை சூட்டியுள்ளார். அதிரடி ஆட்டத்திலும் இக்கட் டான தருணங்களையும் அமைதியாக அணுகி, அணிக்கு வெற்றி தேடித் தருவதில் வல்லவருமான டோனி அண்மைக்காலமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார்.

ஆனால், 'எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை' என்று விமர்சகர் களுக்கு அவர் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர். தொடரின் மூன்று போட்டிகளிலும் அரை சதம் விளாசிய டோனி, 2வது, 3வது போட்டிகளில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் தொடர் நாயகன் விருதும் இவரது வசமானது.

இந்தத் தொடரில் டோனியின் உடற்தகுதியைக் கண்டு லாங்கர் பெரும் ஆச்சரியப்பட்டார். "டோனிக்கு 37 வயதாகிறது. விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடி ஓட்டம் குவிப்பதாகட்டும், அவரது உடற்தகுதியாகட்டும். அவர் இன்னும் உச்சத்தில்தான் உள்ளார். ஆஸ்தி ரேலியாவில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டுகிறது. இப்படியிருக்க, இந்த வயதிலும் அவரின் ஓட்ட வேகத்தைப் பார்க்கும்போது பிரமிப் பாக இருக்கிறது. கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் டோனி. அவரைப் போல சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க வேண்டும் என இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆசைப்பட வேண்டும்," என்றார் லாங்கர்.