மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வியுற்றார். ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டியோடு மோதிய அவர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இருப்பினும் அடுத்தடுத்த செட்களில் 1-6 என்றும் 4-6 என்றும் மரியா கோட்டை விட்டார். இந்தத் தோல்வியின் மூலம் காலிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினார் அவர். அதேநேரம் கடந்த பத்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பொது விருதுப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறும் முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை பார்டி பெற்றார். முன்னணி வீராங்கனையான ஷரபோவாவை வீழ்த்தியதற்காக அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. மகளிர் ஆட்ட நிலவரம் இவ்வாறிருக்க ஆண்கள் பிரிவில் உலகின் இரண்டாவது சிறந்த வீரரான ரபேல் நடால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நேற்று அவர் செக் குடியரசின் தாமஸ் பெட்ரிக்கை வீழ்த்தினார். முதல் செட்டை 6-0 என்று முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்ட நடால், அடுத்த செட்டில் 6-1 என்று வென்றார். ஆனால் கடைசி செட்டில் சற்று திணறியபோதிலும் இறுதி யில் 7-6 என்று அவர் வென்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
மரியா இழந்ததை நடால் பெற்றார்
1 mins read
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பொது விருதுப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லி பார்டி (இடது) தமது வெற்றியை உரக்கக் கத்தி கொண்டாடினார். (வலது படம்) போட்டியிலிருந்து வெளியேறி நடையைக்கட்டிய மரியா ஷரபோவா. படங்கள்: இபிஏ -


