செல்சியின் கனவைச் சிதைத்த ஆர்சனல்

லண்டன்: வெற்றி பெற்றுவிடலாம் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று அதிகாலை இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் ஆர்சனலை எதிர்த்து விளையாடிய செல்சி குழு ஆர்சனலிடம் 0-2 என்ற கோல் எண்ணிக்கையில் மண்ணைக் கவ்வியது.
இதை சற்றும் எதிர்பார்க்காத செல்சி நிர்வாகி மொரிசியோ சாரி, "எனது வீரர்களை நினைத் தால் எனக்கு ஏமாற்றம் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் கோபம்தான் வருகிறது.
"டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவுக்கு எதிராக விளையாடும் போதும் இதே மனப்போக்குடன் தான் விளையாடினர். ஆனால் அதைத் தாண்டி வந்துவிட்டோம் என்று நினைக்கும்போது, அவர் கள் அதே மனப்போக்குடன் இருப் பதை இன்றைய தோல்வி காட்டுகிறது.
"இந்த வீரர்களுக்கு ஊக்கமூட்டி அவர்களை இதுபோன்ற போட்டி களில் களமிறக்குவதற்கு இன்னும் நிறைய செய்யவேண்டியிருக் கிறது. அதிலும் குறிப்பாக எங்க ளது பெனால்டி எல்லையில் வீரர் களின் ஆட்டத்தில் மன உறுதி இல்லை," என்று பொரிந்து தள்ளி உள்ளார்.


நேற்றைய ஆட்டத்தில் வென்று மூன்று புள்ளிகளைத் தனதாக்கிக் கொண்ட நிலையில், ஆர்சனல் தனக்கும் செல்சிக்கும் இடையே உள்ள புள்ளிகள் வித்தியாசத்தை நான்காகக் குறைத்துள்ளதுடன் தரவரிசையில் நான்காம் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரு கிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் 14ஆம் நிமிடத்தில் லக்கசெட் என்ற வீரர் போட்ட கோல் மூலம் ஆர்சனல் முன்னிலை பெற்றது. இத்தனைக்கும் சகவீரரான பெல ரின் லக்கசெட்டை நோக்கி உதைத்த பந்து நேர்த்தியான ஒன்று என்று கூறிவிட முடியாது.
ஆனால், அதையும் லாவகமாக தன்வசப்படுத்திய லக்கசெட் பந்தை உதைத்த வேகம் செல்சி கோல்காப்பாளரால் தடுக்க முடிய வில்லை. செல்சி வீரர்களை அங்கு மிங்கும் நகரவிடாமல் பந்தைக் கொண்டு சென்ற ஆர்சனல் வீரர்களால் செல்சி தடுமாறியது.
இதைப் பயன்படுத்திக்கொண்ட ஆர்சனல் ஆட்டத்தின் 39ஆம் நிமிடத்தில் தனது கேப்டன் லோரான்ட் கோ‌ஷியல்னி மூலம் இரண்டாவது கோலையும் போட்டு செல்சியை திக்குமுக்காட வைத்தது.


முதல் பாதி ஆட்டம் முழுவதும் ஆர்சனலின் தாக்குதல் ஆட்டத் திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த செல்சி, இரண்டாம் பாதி ஆட்டத்திலாவது சோபிக்குமா என்று பார்த்தால் அதுதான் இல்லை.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் செல்சி சற்று சுறுசுறுப்புடன் விளையாடியபோதிலும் ஆர்சனல் கோல் கம்பத்தை ஆட்டத்தின் 82ஆம் நிமிடம் வரை செல்சியால் பதம்பார்க்க முடியவில்லை.
செல்சி வீரர்களின் தாக்குதல் முயற்சிகளை எல்லாம் ஆர்சனல், குறிப்பாக அதன் கேப்டன் மிகத் திறமையாக எதிர்கொண்டு தடுத்து நிறுத்தினார் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
மற்றோர் ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலசை எதிர்கொண்ட லிவர்பூல் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. ஆட்டத் தின் முதல் கோலை போட்ட கிரிஸ் டல் பேலஸ் லிவர்பூலை அதிர்ச் சிக்குள்ளாக்கியது. பின்னர் சுதா ரித்துக்கொண்ட லிவர்பூல் 4-2 என்ற கோல் எண்ணிக்கைக்கு முன்னேறியது.
ஆனால், கடைசி நிமிடம் வரை மனந்தளராமல் போராடிய கிரிஸ் டல் பேலஸ் கூடுதல் நேரத்தின் ஐந்தாம் நிமிடத்தில் ஒரு கோல் போட்டு 3-4 என்ற கோல் எண் ணிக்கையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.
வேறோர் ஆட்டத்தில் மான் செஸ்டர் யுனைடெட் குழுவின் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற் றிருக்கும் சோல்சியாருக்கு ஏழா வது தொடர் வெற்றியைக் கொடுக் கும் விதமாக பிரைட்டன் குழுவை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!