கடைசிக்கட்ட கோல்; ஸ்பர்ஸ் வெற்றி

கடைசிக்கட்ட கோல்; ஸ்பர்ஸ் வெற்றி

1 mins read

லண்டன்: ஃபுல்ஹம் குழுவுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டம் முடிய சில வினாடிகளே எஞ்சியிருந்தபோது ஹேரி விங்க்ஸ் போட்ட கோல் ஸ்பர்சுக்கு வெற்றியைத் தந்தது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் வர ஸ்பர்ஸ் கொண்டுள்ள இலக்கு நிறைவேறும் சாத்தியம் அதிகரித்துள்ளது. மாறாக, இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் ஆபத்தை ஃபுல்ஹம் எதிர்கொள்கிறது. ஸ்பர்ஸ் குழுவின் ஃபெர்னாண்டோ லோரேன்டே சொந்த கோல் போட்டு ஃபுல்ஹம் குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆனால் பிற்பாதி தொடங்கி ஆறு நிமிடங்களில் ஆட்டத்தைச் சமன் செய்தார் டெலி அலி. ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் விங்க்ஸ் அனுப்பிய பந்து வலையைத் தொட்டதும் ஸ்பர்ஸ் கொண்டாடியது.