மெல்பர்ன்: நடப்பு ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொட ரின் நான்காம் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறி னார் உலகின் முன்னாள் முதல் நிலை ஆட்டக்காரரான சுவிட்சர் லாந்தின் ரோஜர் ஃபெடரர். இருபது முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஃபெடரர், ஆஸ்திரேலிய ஓப்பன் நான்காம் சுற்றில் 20 வயதான கிரேக்க வீரர் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸிடம் 6=7, 7=6, 7=5, 7=6 என்ற செட் கணக்கில் தோற்றுப் போனார். இதையடுத்து, விட்டதைப் பிடிக்கும் முயற்சியாக இவ் வாண்டு நடக்கவிருக்கும் பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக ஃபெடரர் அறிவித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளாக அவர் பிரெஞ்சு ஓப்பனில் விளை யாடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. "இவ்வாண்டும் பிரெஞ்சு ஓப்பனில் பங்கேற்காமல் ஓய் வெடுக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை," என்றார் அவர்.
பிரெஞ்சு ஓப்பனில் ஃபெடரர்
1 mins read

