டோனியை கௌரவித்த ஐசிசி

டோனியை கௌரவித்த ஐசிசி

1 mins read
a04ddcdd-a5cb-4172-9034-cda58feaf41a
-

அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) நடவடிக்கையால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் (படம்) ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் டோனி தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்புப் படமாக டோனி படத்தை ஐசிசி போட்டுள்ளது. தமது உச்ச ஆட்டத்திறனை வெளிப்படுத்தாவிடினும் ஆஸ்திரேலியா உடனான மூன்று போட்டிகளிலும் அவர் அரை சதம் விளாசியிருந்தார். ஒட்டுமொத்தமாக அவர் 193 ஓட்டங்களைக் குவித்தார். படம்: டுவிட்டர்/ ஐசிசி