சவூதி அரேபியாவை வீழ்த்திய ஜப்பான்

ஷார்ஜா: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜப்பான் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் சவூதி அரேபியாவை அது 1=0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டகேஹிரோ தொமியாசு தலையால் முட்டி பந்தை வலைக்குள் அனுப்பினார். பந்து வலைக்குள் செல்வதை சவூதியின் கோல்காப்பாளர் முகம்மது அல்ஒவேசால் தடுக்க முடியவில்லை. இதுவே ஜப்பானின் வெற்றி கோலாக அமைந்தது. பிற்பாதி ஆட்டத்தில் சவூதி தாக்குதலில் தீவிரம் காட்டியது. இருப்பினும், அது கோல் போடாதபடி ஜப்பானின் தற்காப்பு அரண் பார்த்துக்கொண்டது. கோல் போட சவூதி அரேபியா எடுத்த முயற்சிகளை ஜப்பானிய தற்காப்பு ஆட்டக்காரர்கள் முறியடித்தனர். இறுதி வரை சவூதியால் ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போக, ஜப்பான் வாகை சூடியது. வரும் வியாழக்கிழமையன்று காலிறுதி ஆட்டத்தில் வியட் னாமைச் சந்திக்கிறது ஜப்பான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!