அனைத்து விருதுகளையும் அள்ளினார்

அனைத்து விருதுகளையும் அள்ளினார்

1 mins read
9d8458e0-67b6-489a-b868-4fedb35ce29f
-
Google News Preferred Icon

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் மூன்று உயர்ந்த விருதுகளையும் வென்ற முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, 30. அதோடு, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டின் கனவு அணிகளின் தலைவராகவும் கோஹ்லியே அறிவிக்கப்பட்டார். சிறந்த வளர்ந்து வரும் ஆட்டக்காரருக்கான விருதை இளம் இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட், 21, வென்றார். டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியில் கோஹ்லி, பன்ட், பும்ரா என மூன்று இந்திய வீரர்களும் ஒருநாள் போட்டிக்கான அணியில் கோஹ்லி, ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா என இந்திய வீரர்கள் நால்வரும் இடம்பிடித்தனர். படம்: ஏஎஃப்பி