மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேற கிட்டிய அருமையான வாய்ப்பை கோட்டை விட்டார் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். நான்கு வெற்றிப் புள்ளிகளைப் பறிகொடுத்ததோடு, மூன்றாவது செட்டில் 5-1 என வலுவான முன்னிலையில் இருந்தும் பிடியை நழுவவிட்டதால் 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் செரீனாவின் கனவும் கலைந்தது. அவரை எதிர்த்தாடிய செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (படம்) முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். இருந்தாலும் எழுச்சியுடன் ஆடிய அவர் 6-4 எனத் தனதாக்கினார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் செரீனாவின் கை ஓங்கியிருந்தபோதும் கடைசி நேரத்தில் பிளிஸ்கோவாவின் அதிரடி ஆட்டத்தில் அவர் நிலைகுலைந்து போனார். இறுதியில், 7-5 எனப் போராடி செட்டைக் கைப்பற்றிய பிளிஸ்கோவா அரையிறுதிக் குள் நுழைந்தார். அரையிறுதியில் அவர் இளம் ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர் கொள்கிறார். காலிறுதியில் ஒசாகா 6-4, 6-1 என்ற செட் களில் உக்ரேனின் ஸ்விட்டோலினாவை வென்றார். படம்: ஏஎஃப்பி
செக் வீராங்கனையிடம் சரணடைந்த செரீனா
1 mins read
-

