செவியாவிடம் பார்சிலோனா அதிர்ச்சித் தோல்வி

மட்ரிட்: ஸ்பெயினின் கோப்பா டெல் ரே கிண்ணக் காற்பந்துப் போட்டியில் செவியாவுக்கு எதி ரான காலிறுதிச் சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் பார்சிலோனா அதிர்ச்சித் தோல்வி அடைந் துள்ளது.
இந்த ஆட்டத்தை செவியா 2-=0 எனும் கோல் கணக்கில் கைப்பற்றியது. இரண்டு கோல் களையும் செவியா ஆட்டத்தின் பிற்பாதியில் போட்டது.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியை செவியா நெருங் கியுள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமாயின் இரண்டாவது ஆட்டத்தில் பார்சி லோனா குறைந்தது மூன்று கோல்களைப் போட வேண்டும். அதுமட்டுமல்லாது, செவியா கோல் போடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆட்டத்தின்போது பெனால்டி எல்லைக்குள் இருந்தபோது பார்சி லோனாவின் ஆர்ட்டுரோ விடா லின் கரத்தில் பந்து பட்டதாகக் கூறி காணொளி மூலம் சரிபார்க் கப்பட்டது. ஆனால் காணொளி ஆய்வுக்குப் பிறகு செவியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. இது செவியா ஆட்டக் காரர்களையும் அரங்கில் கூடியிருந்த அதன் ரசிகர்களையும் அதிருப்தி அடைய வைத்தது.
ஆனால் பார்சிலோனாவின் அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை. இதற்கு செவியாவின் நட்சத்திர வீரர் பென் யெட்டாரின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
முற்பாதி ஆட்டத்தில் அவரது கோல் முயற்சிகள் நூலிழையில் இலக்கைத் தவறின. அதே சமயத்தில் பார்சிலோனாவின் கோல்காப்பாளரைக் கடந்து சென்ற செவியாவின் மால்கம் வலை நோக்கி பந்தை அனுப்பினார். ஆனால் பந்து இலக்கை அடையாது வெளியே சென்றது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது