லீக் கிண்ண இறுதிப் போட்டியில் மேன்சிட்டி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் சிட்டிக்கும் மூன்றாவது நிலை லீக்கில் விளையாடும் பர்ட்டன் அல்பி யோன் குழுக்களுக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் கிண்ண அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டத் தில் 1=0 எனும் கோல் கணக்கில் சிட்டி வென்றது.
இந்த ஆட்டத்தில் சிட்டியின் ஒரே கோலை செர்ஜியோ அகுவேரோ போட்டார்.
ஆட்டத்தின் 26வது நிமிடத் தில் அவர் அந்த கோலை போட் டார். பர்ட்டனால் இறுதி வரை சிட்டிக்கு எதிராக ஒரு கோல்கூட போட முடியாமல் போனது. 
சிட்டியின் அதிரடி ஆட்டத்தை அக்குழுவால் சமாளிக்க முடிய வில்லை. இரு குழுக்களுக்கும் இடையிலான அரையிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் 9=0 எனும் கோல் கணக்கில் சிட்டி அபாரமாக வென்றிருந்தது.
ஒட்டுமொத்த கோல் அடிப் படையில் 10=0 எனும் கோல் கணக்கில் பர்ட்டனைப் பந்தாடி உள்ளது சிட்டி. லீக் கிண்ணத்தின் இறுதிச் சுற்றில் செல்சி அல்லது ஸ்பர்ஸ்  குழுவை சிட்டி சந்திக்கும்.
2019-01-25 06:00:00 +0800
ஒப்பந்தம் பூர்த்தி; செல்சியில் ஹிகுவேன்
லண்டன்: இத்தாலியின் யுவென்டஸ் காற்பந்துக் குழு விற்காக விளையாடி வரும் அர்ஜெண்டினா தாக்குதல் ஆட்டக்காரர் கொன்ஸாலோ ஹிகுவேனை செல்சி இரவல் பெற்றுள்ளது. 
இப்பருவத்தின் இறுதிவரை அவர் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் செல்சிக் காக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இத்தாலியின் ஏசி மிலான் குழுவுடன் கையெழுத்தான ஓராண்டுகால ஒப்பந்தம், பின்னர் ஆறு மாதத்திற்கும் குறைவாக குறைக் கப்பட்டதைத் தொடர்ந்து ஹிகு வேன் செல்சியுடன் இணைகிறார். 
இதன்மூலம் செல்சியின் இத்தாலிய நிர்வாகி மோரிசியோ சாரியுடன் மீண்டும் இணைகிறார் அவர். முன்னதாக, இத்தாலியின் நெப்போலி குழுவின் நிர்வாகி யாக சாரி பதவி வகித்தபோது ஹிகுவேன் அக்குழுவிற்காக விளையாடினார்.
“செல்சிக்காக விளையாடு வதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அதைக் கைப்பற்றிக்கொள்ள விரும்பினேன். இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி வரலாற்று சிறப்புமிக்க இக் குழுவை நான் எப்போதும் நேசித்துள்ளேன். அக்குழுவிற்கு அருமையான விளையாட்டரங்கம் உள்ளது,” என்று செல்சி இணைப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 31 வயது ஹிகுவேன் தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்

தலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்

24 Jun 2019

கோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி