77 ஓட்டங்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 77 ஓட்டங்களில் சுருண்டது. அந்த அணியின் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கீமார் ரோச் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ், தனது இரண்டாம் இன்னிங்சில் இரண்டாம் நாள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை எடுத்திருந்தது.