முன்னிலையை நீட்டிக்கும் முனைப்பில் இந்தியா

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், அவ்விரு அணிகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. 
நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌத்தி நீக்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் சோதி சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்த மட்டில், முதல் போட்டியில் விளையாடிய அதே பதினொரு வீரர்களே இன்றும் களமிறங்கக் கூடும்.
இதற்கிடையே, அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அதன்பின் நடக்கவுள்ள டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இடைக் காலத் தடை நீக்கப்பட்டதால் ஹார்திக் பாண்டியா நியூசிலாந்து சென்று, இந்திய அணியுடன் இணைகிறார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது