ஈரானுக்கு ஈடில்லா சீனா

அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ஈரான் அணியின் ஆட்ட வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சீனா 3-0 என்ற கோல் கணக்கில் தோற்று காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியது.
முதல் பாதியில் ஈரான் ஆட் டக்காரர்கள் மெஹ்தி தரிமியும் சர்தார் அஸ்மோனும் ஆளுக்கு ஒரு கோலை அடித்தனர். பிற் பாதியின் இறுதித் தருணத்தில் கரீம் அன்சரிஃபர்ட் ஒரு கோலை அடித்து ஈரானின் வெற்றியை உறுதி செய்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசியக் கிண்ணப் போட்டி களில் அரையிறுதிக்கு ஈரான் முன்னேறியது இதுவே முதல் முறை. நடப்பு ஆசியக் கிண்ணத் தொடரில் இதுவரை ஐந்து ஆட் டங்களில் விளையாடியிருக்கும் ஈரான் மொத்தம் 12 கோல்களை அடித்துள்ளது. பதிலுக்கு எதிர் அணிகளை ஒரு கோல்கூட அடிக்க விட்டதில்லை.
நாளை மறுநாள் நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் ஈரான், நான்கு முறை ஆசியக் கிண்ண வெற்றியாளரான ஜப்பானுடன் பலப்பரிட்சை நடத்தவிருக்கிறது.
காலிறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் ஆசியாவின் வலிமையான அணிகளுள் ஒன்றாக உருவெடுத்து வரும் வியட்நாமைத் தோற்கடித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி

21 Mar 2019

சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா