ஆஸ்திரேலியா, தென்கொரியா பயணம் முடிந்தது

யுஏஇ வீரர்கள் வெற்றிக் களிப்பில் மிதந்திட, துக்கம் தாளாமல் இடிந்துபோய் திடலிலேயே சாய்ந்த ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள். படம்: இபிஏ

அல் அயின்: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆஸ்திரே லியா மற்றும் தென்கொரியாவின் பயணம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் இவ்விரு குழுக்களும் அதிர்ச்சித் தோல்வி அடைந்தன. நடப்பு வெற்றியாளர் ஆஸ்தி ரேலியாவுக்கும் போட்டியை ஏற்று நடத்தும் ஐக்கிய அரபு சிற்றரசுகள் (யுஏஇ) குழுவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆட்டம் தொடங்கியது முதல் யுஏஇ தாக்குதலில் ஈடுபட்டது. கோல் போடும் முனைப்புடன் யுஏஇ அதிரடியாக விளையாட ஆஸ்திரேலியத் தற்காப்பு விழிப்புடன் இருந்து சமாளித்தது.

ஆட்டம் தொடங்கி சில வினாடிகளிலேயே யுஏஇக்கு கோல் போட அருமையான வாய்ப்பு கிடைத்தது. இஸ்மாயில் அல் ஹமாடி வலை நோக்கி அனுப்பிய பந்தை ஆஸ்திரேலிய கோல்காப்பாளர் மேட் ராயன் தடுத்து நிறுத்தினார். 19 நிமிடங்கள் கழித்து ஹமாடி மீண்டும் மிரட்ட, அவரது கோல் முயற்சியை ராயன் மீண்டும் முறியடித்தார். முற்பாதி ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியாவும் சிறப்பாக விளையாடி பல கோல் முயற்சிகளில் ஈடுபட்டது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’