பார்சிலோனாவுக்கு அட்லெட்டிகோ நெருக்குதல்

பார்சிலோனாவுக்கு அட்லெட்டிகோ நெருக்குதல்

1 mins read

மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து லீக்கில் முதலிடம் வகிக்கும் பார்சிலோனாவுக்கு நெருக்குதல் தரும் விதமாக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கெடஃபே குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அட்லெட்டிகோவின் இரு கோல்களை அந்தோய்ன் கிரிஸ்மன், சால் நிகுவேஸ் ஆகிய ஆட்டக்காரர்கள் புகுத்தினர். கெடஃபே கடைசியாக விளையாடிய 12 ஆட்டங்களில் ஒருமுறை மட்டுமே தோற்றது, அதுவும் பார்சிலோனாவின் கால்களில். ஸ்பானிய லீக் கிண்ணத்தைத் தான் வெல்வதற்கு மிரட்டலாக அமையும் குழுக்களில் அட்லெட்டிகோவும் ஒன்று என்று பார்சிலோனா நிர்வாகி எர்னெஸ்ட்டோ வெல்வார்டே கூறினார்.