வெஸ்ட் இண்டீசிடம் சரணடைந்தது இங்கிலாந்து

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுன் நகரிலுள்ள கென் சிங்டன் ஓவல் திடலில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. 
பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த வெஸ்ட் இண் டீஸ் 289 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின், முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து, அடுத் தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சால் 77 ஓட்டங் களுக்கு ஆல் அவுட்டானது இங் கிலாந்து. அந்த அணியில் 17 ஓட்டங்களே அதிகபட்ச தனிநபர் ஓட்டமாக இருந்தது. 
212 ஓட்டங்கள் முன்னிலை யுடன் 2வது இன்னிங்சைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், மூன்றாம் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ஓட்டங்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இரு இன்னிங்சிலும் சேர்த்து 628 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கி லாந்து 2வது இன்னிங்சில் களமி றங்கியது. 
அடுத்தடுத்து விக்கெட்டு களை இழந்த அந்த அணி, 246 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆகி 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீசின் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டர் சேஸ் 8 விக்கெட்டு களைச் சாய்த்தார். 2வது இன் னிங்சில் இரட்டை சதம் அடித்த ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி