68 வயது வரை தீராத கிரிக்கெட் மோகம்

வெலிங்டன்: நியூசிலாந்து அணி சார்பில் 1975ஆம் ஆண்டு அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்த எவன் சேட்ஃபீல்ட், ஒருவழியாக தமது 68வது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 123 விக்கெட்டுகளையும் 113 ஒருநாள் போட்டிகளில் ஆடி 140 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ‘நேனே எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் இவர், கடைசியாக கடந்த சனிக்கிழமை நேனே ஓல்டு பாய்ஸ் அணிக்காக ஈஸ்டர்ன் சபர்ப்ஸ் அணியை எதிர்த்து விளையாடினார்.