வாய்ப்புகளை இழந்து ஸ்பர்ஸ் பரிதவிப்பு

லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழு கிண்ணம் வென்று பத்தாண்டுகளுக்குமேல் ஆகிவிட்ட நிலையில் நான்கு நாட்களில் இரண்டு கிண்ண வாய்ப்புகளைப் பறிகொடுத்தது ஏமாற்றமளித்தது.
கிரிஸ்டல் பேலஸ் குழுவிற்கெதிராக நேற்று அதிகாலை நடந்த எஃப்ஏ கிண்ண நான்காம் சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அக்குழு தோற்று வெளியேறியது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை லீக் கிண்ண அரையிறுதியில் செல்சி குழுவிடம் தோல்வி கண்ட ஸ்பர்ஸ், நேற்றைய ஆட்டத்தில் 35 நிமிடங்களுக்குள்ளாகவே இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்தது.
2016 நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக முதல் பதினொருவரில் ஒருவராகக் களமிறக்கப்பட்டபோதும் பேலஸ் ஆட்டக்காரர் கானர் விக்கம் ஆட்டத்தில் முத்திரை பதிக்கத் தவற வில்லை. ஒன்பதாம் நிமிடத்தில் அவர் அடித்த கோலால் பேலஸ் முன்னிலை பெற்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது