பந்துவீச்சில் எழுச்சி; பாகிஸ்தான் பதிலடி

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 164 ஓட்டங்களுக்குச் சுருண்டது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ‌ஷின்வாரி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலகுவான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிபெற்றது. முன்னதாக, எதிரணி வீரரை இனரீதியாகத் தூற்றியதால் நான்கு ஆட்டங்கள் தடை பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமதுக்குப் பதிலாக சோயப் மாலிக் தலைவராகச் செயல்பட்டார்.

Loading...
Load next