மேன்யூவுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் பங்கேற்பது சிரமம்

பாரிஸ்: அடுத்த மாதம் 12ஆம் தேதி மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிராக நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் பிஎஸ்ஜி குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் களமிறங்க மிகவும் குறைவான வாய்ப்பே உள்ளது என்று அக் குழுவின் நிர்வாகி தாமஸ் டகல் தெரிவித்திக்கிறார்.
இந்தப் பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடர் ‘நாக் அவுட்’ சுற்றை எட்டியுள்ளது. இதில் ஒரு மோதலில் பிஎஸ்ஜியும் மேன்யூவும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. அவ் வகையில், இவ்விரு குழுக்களும் மோதும் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி யுனைடெட் டின் ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, கடந்த புதன் கிழமை ஸ்ட்ராஸ்போர்க் குழுவிற்கெதிரான பிரெஞ்சுக் கிண்ண ஆட்டத்தில் விளையாடியபோது பிஎஸ்ஜியின் பிரேசில் வீரரான நெய்மாருக்கு பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் அதே இடத்தில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.