அடுத்த ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அட்டவணை வெளியீடு

அடுத்த ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அட்டவணை வெளியீடு

1 mins read

துபாய்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஐசிசி 2007ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தியது. அறிமுக உலகக் கிண்ணத்தில் இந்தியா வெற்றி யாளர் பட்டம் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்று வருகிறது. 2009ல் பாகிஸ்தானும் 2010ல் இங்கிலாந்தும் (2011ல் இந்தியாவில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றதால் 2010ல் நடத்தப்பட்டது) 2012ல் வெஸ்ட் இண்டீசும் 2014ல் இலங்கையும் 2016ல் வெஸ்ட் இண்டீசும் டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றின. ஏழாவது டி20 உலகக் கிண்ணப் போட்டி முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந் தது. ஆனால் 2017ஆம் ஆண்டுடன் ஐசிசி வெற்றியாளர் கிண்ணத் தொடர் முடிவடைந்துவிட்டதால், ஐசிசி 2020ல் டி20 உலகக் கிண்ணத்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை டி20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறுகிறது.